14. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்

காஞ்சிமாநகரில் பல்லவர் குலத்தில் ஐயடிகள் காடவர்கோன் பிறந்தார். காடர் என்பது பல்லவ குலத்தினரைக் குறிக்கும். ஐயடிகள் என்பது ஐயனடிகள் என்பதன் மரூவாகும், கலியையும் பகைவரது வலியையும் அடக்கி சைவநெறியை எங்கும் பரவச் செய்து நீதி நெறி தழுவாது அரசு புரிந்தார். வடமொழி, தமிழ் இரு மொழிகளிலும் வல்லவர், காலக்கிரமத்தில் உலகத்தை அரசு புரிவது துன்பம் எனக்…

Read More

13. ஏனாதிநாத நாயனார்

கும்பகோணத்திற்கு அருகில் ஏனநல்லூர் என்ற ஊரிலே ஈழக்குலச்சான்றோர் ஏனாதிநாதர் பிறந்தார். ஏனாதி என்றால் படைத்தளபதி என்றாகும். மன்னர்களுக்கு போர் பயிற்சி தரும் பணியை மேற்கொண்டார் ஏனாதிநாதர். அதில் வரும் வருமானத்தைக் கொண்டு அடியவர்கட்கு வேண்டியவற்றை வழங்கி வழிபடுவது அவர் கொள்கையாகும். ஏனாதிநாதர் வாள் வலிமையும், தோள் வலியும் அஞ்சா நெஞ்சமும் உடையவராய் திகழ்ந்தார். ஊரில் வாட்படைப்…

Read More

12. ஏயர்கோன் கலிக்காம நாயனார்

திருப்பெருமங்கலம் வேளாளர் பிறந்தார் ஏயர்கோன் கலிக்காமர். இறைவனிடத்தில் மாறாத அன்பும் அடிவர்கள்பால் அளவற்ற பக்தியும் கொண்டிருந்தார். சிவனை முழுமுதற் பொருளாக நினைத்திருந்தார். அவ்வாறு தான் வழிபடும் சிவனை நம்பிஆரூரர் தன் மனைவி பொருட்டு தூது விடுவதை அறிந்து கோபப்பட்டார். அதிசயப்பட்டார். எரிச்சலுற்றார். இவரெல்லாம் ஓர் தொண்டரா? என்னால் இதைக் காதால் கேட்கவும் முடியவில்லை. அந்த ஆரூரர்…

Read More

11. எறிபத்த நாயனார்

கரூரில் சான்றோர் குலத்தல் பிறந்தாா். அங்குள்ள கோவிலின் பசுபதீசுவரரை நாளும் மூன்று முறை வணங்கி வந்தார். இத்தலப்பெருமானை வழிபடின் மீண்டும் ஒரு கருவில் பிறக்க வாய்ப்பு ஏற்படாது. எறிபத்தர் அடியார்களுக்கு தொண்டு செய்வதில் சிறந்து விளங்கினார். அடியார்களுக்கு இன்னல் ஏற்பட்டால் பரசு என்ற ஆயுதத்தால் அவர்களைக் காப்பாற்றி உதவுவார். அதே கரூரில் சிவகாமி ஆண்டார் என்ற…

Read More

10. உருத்திர பசுபதி நாயனார்

உருத்திர பசுபதி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார் இத்திருத்தலையூரிலே அந்தணர் குலத்திலே பசுபதியார் என்னும் பெரியார் அவதரித்தார். இவர் சிவபெருமானது திருவடிகளில் நிறைந்த அன்பினையே பெருஞ் செல்வமெனக் கொண்டிருந்தார். இவ்வன்புச் செல்வத்தால் ஸ்ரீ உருத்திர மந்திரத்தைக் காதலித்தோதி வந்தார். திரு உருத்திரம் என்பது 101 வரிகளை…

Read More

9. இளையான்குடி மாற நாயனார்

இராமநாதபுரம் பரமக்குடியிலிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர் இளையான்குடி. வேளாளார் குலத்தில் பிறந்து விவசாயம் மேற்கொண்டு வந்தார். மிகுந்தச் செல்வந்தராய் இருந்தார் இளையான்குடி மாறன். இறைவன் மேலும் அவரின் அடியார்கள் பாலும் அளவிலாத அன்பு கொண்டவர். அன்னம் வழங்குவதை தன் பெருந்தொண்டாக கருதினார். வெளியில் பாதையில் நடப்பவர் யாராயினும் அடியவராக கருதி வழிபட்டு அமுது…

Read More

8. இயற்பகை நாயனார்

பூம்புகார் அருகிலுள்ள சாயாவனம் என்ற இடத்தில் பிறந்தவர் இயற்பகையார். உலக இயற்கைக்குப் பகையானவர். நமக்கு உரிமை இல்லாதவற்றை எல்லாம் என்னுடையது என நினைப்பது உலக இயல்பு. ஆனால் இவர் தன்னுடையதை என்னுடையது என எண்ணாதவர். அடியார்பால் அன்பும் நேசமும் கொண்டவர். அடியார் எது கேட்டாலும் வேண்டுவனவற்றை இல்லை என்று சொல்லாமல் வழங்குபவர். உலக இயலுக்கு பகையானவர்.…

Read More

7. இடங்கழி நாயனார்

கொடும்பாளூர் என்ற ஊரில் இடங்கழியார் பிறந்தார். ஆதித்த சோழன் மரபில் வந்த மன்னர். சைவ நெறியையும் தர்ம நெறியையும் பேணிப் பாதுகாத்தார். திருக்கோவில்களுக்கு வேண்டிய பணிகளைச் செய்தார். அடியவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து வந்தார். அந்த ஊரில் சிவனந்தன் என்ற அடியார் மகேசுவர பூசை செய்து அடியவர்களுக்கு அமுது செய்து வந்தார். ஒருநாள் அதற்கான பொருள்…

Read More

6. இசைஞானியார் நாயனார்

சோழ நாட்டில் திருவாரூரில் (கமலாபுரம்) ஆதிசைவ மரபில், கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார் இசைஞானி நாயனார். சிறுவயது முதலே சிவபெருமானின் மீது மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தார். திருவாரூர் பெருமான் அடிகளை மறவாத நெஞ்சமுடையார். திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரைச் சார்ந்த சிவபக்தரான சடையனார் என்பவரை மணந்தார். இசைஞானியார், அவரது கணவர் சடையனார்,…

Read More

5. ஆனாய நாயனார்

மழவநாட்டின் ஒரு பகுதியான திருமங்கலம், லால்குடி அருகே உள்ள ஊர். அவ்வூரில் இடையர்- ஆயர்கள் குலத்தில் பிறந்தவர் ஆனாயர். அவர் ஆநிரைகளை, ஊரை அடுத்த காட்டுப் பகுதிக்கு கூட்டிச்சென்று மிருகங்களிடமிருந்து பாதுகாத்து புல் வெளியில் மேய விட்டு, நல்ல நீர் பருகச் செய்து, கண்ணும் கருத்துமாக மாடுகளைக் காக்கும் பணியை செவ்வனே செய்து வந்தார். அப்போது…

Read More