6. இசைஞானியார் நாயனார்
சோழ நாட்டில் திருவாரூரில் (கமலாபுரம்) ஆதிசைவ மரபில், கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார் இசைஞானி நாயனார். சிறுவயது முதலே சிவபெருமானின் மீது மிகுந்த பக்தி கொண்டு வாழ்ந்தார். திருவாரூர் பெருமான் அடிகளை மறவாத நெஞ்சமுடையார்.
திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரைச் சார்ந்த சிவபக்தரான சடையனார் என்பவரை மணந்தார். இசைஞானியார், அவரது கணவர் சடையனார், மகன் சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவருமே 63 நாயன்மார்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
சுந்தரமூர்த்தி நாயனார் தமது திருத்தொண்டத் தொகையில்,
“இசைஞானி காதலன் அடியார்க்கும் அடியேன்”
எனத் தம் தாயாரின் புகழைப் போற்றிப் பாடியுள்ளார்
இறைவன்: வன்மீகநாதர் (சுயம்பு மூர்த்தி)
இறைவி : கமலாம்பிகை
தலமரம் : பாதிரி
தீர்த்தம் : கமலாலயம்
குலம் : ஆதிசைவம்
அவதாரத் தலம் : திருவாரூர்
முக்தி தலம் : திருநாவலூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : சித்திரை – சித்திரை
வரலாறு : சடைய நாயனாரின் துணைவியார். சுந்தரரைச் சைவ உலகத்திற்குக் கொடுத்தவர்.
சப்த விடங்கத் தலம்: தியாகராஜர் நடனமாடும் ஏழு (சப்த) விடங்கத் தலங்களில் இதுவே முதன்மையானது.
ஆழித்தேர்: ஆசியாவிலேயே மிக பிரம்மாண்டமான திருவாரூர் ஆழித்தேர், அழகுக்கும் கம்பீரத்துக்கும் பெயர் பெற்றது.
கட்டடக் கலை: 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், மற்றும் நூற்றுக்கணக்கான தூண்களைக் கொண்ட மிகப்பெரிய கோயில் வளாகம்
அமைவிடம்: திருவாரூர் நகரத்தின் மையப்பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் இருந்து மிக எளிதாக அடையலாம்.
முகவரி : அருள்மிகு. தியாகராசர் திருக்கோயில், திருவாரூர்– 610001 திருவாரூர் மாவட்டம்.
