நித்திய சுமங்கலி மாாியம்மன் கோயில்

கண் குறைபாட்டை நீக்கும் அதிய கோயில். கண்ணில் இழந்த சக்தியை மீண்டும் பெறவும், கண்ணில் உள்ள தோஷம் நீங்கி கண்பாா்வை நன்கு தொிய வாழ்கையில் ஒருமுறையாவது போகவேண்டிய கோயில் இது.

தல வரலாறு:
முன்பு ஒரு காலத்தில் விவசாய நிலமாக இருந்த இந்த பகுதியில் வழக்கம் போல ஒரு விவசாயி தனது வயல்களை உழுது கொண்டிருந்தாா். அப்போது, நிலத்தில் ஓரிடத்தில் கலப்பை மாட்டிக்கொண்டது. அந்த இடத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு விவசாயி திகைத்தார். பூமிக்குள் தோண்டி பார்த்த போது, உள்ளே பீடம் ஒன்று கிடைத்தது. அதை வெளியில் எடுத்தார் விவசாயி. அப்போது, அசரீரியாக ஒரு குரல் கேட்டது. “நான் மாரியம்மன். எனக்கு இங்கே கோயில் அமைத்து வழிபாடு நடத்தவேண்டும். அப்படிச் செய்தால், அனைவரையும் காத்து நிற்பேன்” என்றது. விவசாயி மனம் மகிழ்ந்து அவ்வண்ணமே செய்தார். அன்று முதல் இன்றுவரை அம்மன் அந்தப் பகுதி மக்களைக் காக்கும் தெய்வமாக ஆனார்.

பெயர்க் காரணம்:
உலக அளவில் இல்லாத அளவிற்கு, இந்த கோவிலில் ஒரு சிறப்பு உண்டு. அம்மனுக்கு எதிரே யாளி வாகனம் இருக்கிறது. பொதுவாக மாரியம்மன் கோயில்களில் விழாக்காலங்களில் மட்டும் அம்மனுக்கு எதிரே கம்பம் நடப்படும். இந்த கம்பத்தை அம்மனுடைய கணவனாகக் கருதி பூஜை செய்வர். ஆனால், இத்தலத்தில் அனைத்து நாட்களிலும் அம்மனுக்கு எதிரே கம்பம் இருக்கிறது. அம்மன் தனது கணவனாகக் கருதப்படும் கம்பத்தை நேரே பார்த்துக் கொண்டிருப்பதால் இவளிடம் வேண்டிக்கொள்ளும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பது ஐதீகம். எனவே இந்த அம்மனை, ‘நித்ய சுமங்கலி மாரியம்மன்’ என்று அழைக்கிறார்கள்.

குழந்தைவரம் வேண்டுவோர் இங்கு ஒரு வித்தியாசமான பிரார்த்தனை செய்கின்றனர். ஐப்பசி விழாவின்போது அம்மனுக்கு எதிரேயுள்ள பழைய கம்பத்தை எடுத்துவிட்டு, புதிய கம்பம் நடுகின்றனர். பழைய கம்பத்தை இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள தீர்த்தக் கிணற்றிற்கு கொண்டு செல்கின்றனர். அப்போது கம்பத்திற்கு தயிர் சாத நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் கம்பத்தை வணங்கி, தீபமேற்றி, தயிர் சாத பிரசாதம் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்புகிறார்கள்.

மூலவா் : நித்திய சுமங்கலி மாாியம்மன்

தல விருட்சம்: வேம்பு

கோயில் அமைப்பு : நித்திய சுமங்கலி மாாியம்மன் திருக்கோயில் ஐந்து நிலைகளையுடைய இராஜகோபுரம் உள்ளது.
இந்த இராஜ கோபுரமானது வடக்கு நோக்கியவாறும் உள்ளது.

சிறப்பு : 365 நாளும் சுமங்கலி கோலத்தில் இருக்கும் அம்மன்.
நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் கொல்லிமலை, அலவாய் மலை, நைனாமலை, போத மலை என்னும் நான்கு
மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது.

அமைவிடம் : இராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில், ராசிபுரத்திலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகில்

முகவாி : முகவரி: அருள்மிகு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில்,
நாமக்கல் மெயின் ரோடு, ராசிபுரம்,
நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு – 637408.

தரிசன நேரம் : காலை 6 முதல் 12 மணி வரை மற்றும் மாலை 4.30 முதல் 8 மணி வரை.