திருப்பாவை 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்றுகப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்குவெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனைஇப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய். பொருள்: முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக!…

Read More

திருப்பாவை 19

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனைஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய். பொருள்: குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக…

Read More

திருப்பாவை 18

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்,நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்;வந்தெங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட,செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்பவந்து திறவாய், மகிழ்ந்தேலோ ரெம்பாவாய். பொருள்: மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை…

Read More

திருப்பாவை 17

அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கேஎம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்அம்பரம் ஊட அறுத்து ஓங்கி உலகளந்தஉம்பர்கோ மானே உறங்காது எழுந்திராய்}செம்பொற் கழலடிச் செல்வா பலதேவாஉம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய். பொருள்: ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள்…

Read More

திருப்பாவை 16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடையகோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரணவாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறைமாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீநேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய். பொருள்: எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான…

Read More

திருப்பாவை 15

எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுகஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையைஎல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்கவல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய். பொருள்: ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே?…

Read More

திருப்பாவை 14

செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். பொருள்: நாங்கள் எழுவதற்கு முன்னதாகவே வந்து எங்களை எல்லாம் எழுப்புவேன் என வீரவசனம் பேசினாயே, வாக்கை மறந்ததற்கு வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டு…

Read More

திருப்பாவை 13

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனைகிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுபுள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதேபள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். விளக்கம்: “கள்ளம் தவிர்ந்து என்கிறாள் ஆண்டாள். தூக்கம் ஒரு திருட்டுத்தனம். பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல! நேரத்தை வீணடிப்பதும்…

Read More

2. அப்பூதியடிகள் நாயனார்

திருவையாறிலிருந்து 8 கிலோ மீட்டா் தூரத்தில் உள்ள திங்களூரில் அந்தனர் குலத்தில் பிறந்தவர் அப்பூதியார். நாவுக்கரசர் பெருமானை பார்க்காமலேயே அவரைத் தன் குருவாக ஏற்று அவரின் பெயரிலேயே அறச்சாலைகள் தொடங்கி தொண்டு செய்து வந்தார். அமைதி வடிவானவர். பொய், களவு, காமம், கோபம் இவற்றையெல்லாம் நீக்கியவர். ஒருநாள் திங்களூர் வந்த அப்பரடிகள் தன் பெயரிலேயே கல்விச்…

Read More

1. அதிபத்த நாயனார்

அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். நாகப்பட்டினம் மீனவ குலத்தில் பிறந்தார் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் காரணமாக, தான் பிடிக்கும் மீன்களில் சிறந்த ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சில நாட்களில் ஒற்றை மீனே பிடிபட்டாலும் அதனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து விட்டு, வெறுங்கையுடன் திரும்புவார்.…

Read More