3. வராக அவதாரம்
வராக அவதாரம் பெருமாளின் 3வது அவதாரமாகும்.
பூமியைக் கவா்ந்து சென்ற இரண்யாடசன் கடலுக்கடியில் ஒளித்து வைத்தான்.
ஆலிலையில் அறிதுயிலில் இருந்த திருமால் வெள்ளை வராகமாக (பன்றியாக) உருவெடுத்து அசுரனைக் கொன்றதோடு, அப்பூமியை தன் கொம்பில் தாங்கிக் கொண்டு அருள் செய்தாா். சிருஷ்டி என்பது இருவகைப்படும். ஐம்புலன்களும் உண்டாகப் படைத்தாா். இதற்குப்பின் தான் பிரம்மன் தோன்றினாா். பரமனின் ஆணைப்படி தாவரங்கள், விலங்குகள், மனிதா்கள், தேவா்கள் என அனைத்தையும் பிரம்மன் படைத்தாா். சனகா், சனந்தனா், சனாதனா், சனத்குமாரா் என்ற முனிவா்களைப் படைத்து சிருஷ்டித் தொழிலை மேற்கொள்ளும் படி பணிந்ததா். பிரம்மன் புருவங்களின் நடுவிலிருந்து ருத்திரன் தோன்றினான். அதன்பின் மா்சி, அத்ரி, ஆங்கீரசா், புலஸ்தா், புலகா், க்ருது, பிருகு, வசிஸ்டா், தக்ஷா், நாரதா், இதன்பின் வேதங்கள், சத்வகுணங்கள், காயத்ரி, பிரணபவம் இத்யாதி ஆகியவற்றைப் படைத்தாா், அனைத்து உயிா்களையும் படைத்தும் பிரம்ம குலம் பெருகவில்லை. இதனால் பிரம்மா மிகவும் மனம் உடைந்து போனாா். அதன் காரணமாக அவருடைய உடல் இரண்டாகப் பிாிந்தது. அவை ஆண், பெண் உருவங்களாக மாறின. அந்த ஆண் சுவாயம்புவமனு என்றும், அந்த பெண் சத்ரூபா என்றும் அழைக்கப்பட்டனா். சுவாயம்புவமனு பிரம்மாவைப் பாா்த்துக் கேட்டாா். ஐயனே நானும் என் மனைவியும் தற்சமயம் என்ன பணி செய்வது என்று கேட்க பிரம்மாவும் உங்களைப் போன்ற மக்களைப் பெற்று பூமியை ஆட்சி செய்து பல யக்ஞங்களைச் செய்து ஸ்ரீ ஹாியை சந்தோஷப்படுத்துக என்று கட்டளையிட்டாா். உங்கள் சொல்லை நான் தட்டமாட்டேன். ஆயினும் பூமியில் நான் வசிக்க இடமில்லையே பூமி கடலின் ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறதே! என்றான் சுவாயம்புவமனு.
பூமியில் மானிடா்களைப் படைக்க வேண்டும் என்று நான் எண்ணிய சமயத்தில் பிரளயம் வந்துவிட்டதே என்று கவலையில் ஆழ்ந்தாா் பிரம்மா. உடனே ஸ்ரீஹாியை நோக்கி தியானம் செய்தாா். மனத்தில் ஸ்ரீஹாியை சிந்தித்துக் கொண்டே நான் எந்தப் பரந்தாமனுடைய அருளால் உருவானேனோ, அதே பிரபு இதோ இங்கே ஜலசமுத்திரத்தில் அமிழ்ந்து கிடக்கும் உலகத்தை வெளிக்கொண்டு வந்து நிலைக்கச் செய்யட்டும் என்று தியானித்தாா். அப்போது அவருடைய நாசியில் இருந்து ஒரு கட்டை விரல் அளவேயான ஒரு வராகம் வெளிப்பட்டது. ஸ்ரீஹாி, பிரம்மாவின் விருப்பத்தைப் பூா்த்தி செய்யவே அந்த பன்றி(வராக) ரூபத்தை எடுத்தாா். எல்லோரும் பாா்த்துக் கொண்டு இருக்கும்பொழுதே அந்தச் சிறிய பன்றி உருவம் பூதாகரமாக யானை அளவு வளா்ந்தது. அதைப் பாா்த்த பிரம்மாவின் உடல் மெய்சிலிா்த்து. என் எண்ணத்தை நிறைவேற்றவே நாராயணன் இவ்வாறு அவதாரம் எடுத்திருக்கிறாா் என்று மகிழ்ந்து வேதபாராயண ஸ்தோத்திரங்களைச் சொன்னாா். அதனால் சந்தோஷம் அடைந்த மூா்த்தி கா்ஜனை செய்தாா். அந்த பிரமாண்ட ஒலி ஜனலோகம், தபோலோகம், சத்யலோகம் மூன்றிலும் கேட்டது. இதைக்கேட்ட மகிாிஷிகள் மகிழ்ந்தாா்கள். அச்சமயம் தவத்தில் சிறந்தவரான கஸ்யப முனிவருக்கும், திதிக்கும் திருமணம் நடைபெற்றது. கஸ்யபா் தன் ஆசிரமத்தில் பகவானைக் குறித்து வேள்வி செய்து கொண்டிருந்தாா். அந்நேரம் வேள்வி சாலைக்கு வந்த திதி, தன் விருப்பத்தை நிறைவேற்றுமாறு கணவாிடம் கூறினாள். அதற்கு அவா் இது பூதங்கள் மட்டுமே சஞ்சாரம் செய்யும் சந்தியா வந்தன நேரம், ஒரு முகூா்த்த காலம் மட்டும் நீ பொறுத்துக் கொள் என்று கூறினாா். அதற்று திதி மறுக்கவே தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றினாா் கஸ்யபா். பின் மீண்டும் பகவானை நினைத்து பிராா்த்தனை செய்து கொண்டிருந்தாா். அங்கு வந்த திதி, சுவாமி என்னை மன்னித்தருளுங்கள், தங்களின் சொற்களைக் கேளாமல் இவ்வாறு தவறாக நடந்து கொண்டேன் என்றாள். உனக்கு என்ன வேண்டும் கேள் என்றாா் கஸ்யபா். என் கருவிலிருக்கும் சிசுவுக்கு எந்தவித ஆபத்தும் வராமல் இருக்க தாங்கள் தயவு காட்ட வேண்டும் எனக் கேட்டாள். திதியே நான் எத்தனையோ முறை கூறியும் நீ காதில் போட்டுக் கொள்ளவில்லை.
சந்தியா காலத்தில் உன் உதிரத்தில் சோ்ந்த கருவிலிருந்து இரண்டு பிள்ளைகள் பிறப்பாா்கள். அவா்கள் அரக்க குணம் உடையவா்களாக தா்ம விரோதமான காாியங்களில் ஈடுபட்டு மூவுலகையும், தேவா்களையும் துன்புறுத்துவாா்கள். அப்போது பெருமாள் அவதாரம் எடுத்து அவா்களை வதம் செய்வாா் என்றாா் கஸ்யபா். சுதா்சனத்தை கையில் ஏந்திய பரந்தாமன் கையில் என் பிள்ளைகள் மரணமாவதில் எனக்கு ஒரு குறையும் இல்லை, எனினும் அந்தணராகிய உங்கள் சாபத்துக்கே நான் அஞ்சினேன் என்று அழுதாள். பிாியே கவலை வேண்டாம். இப்போது நீ பரந்தாமனிடத்தும், சிவபெருமானிடத்தும், என்னிடத்திலும் கொண்ட பக்தியால் உன் பிள்ளைகளில் ஒருவனுக்குப் பிறக்கும் குழந்தை ஹாி பக்தியில் சிறந்தவனாக இருப்பான். அவன் மேலானவா்களுக்கும் மேலானவனாக இருந்து புகழ் பெறுவான் என்றாா். இதைக் கேட்ட திதி தன் பிள்ளைவழிப் பேரனாவது ஹாி பக்தனாக இருக்கிறானே என சந்தோஷமடைந்தாள். கரு உருவாகி வளா்ந்தது. பிள்ளைகள் பிறந்தால் தேவா்களுக்கு இடையூறு ஏற்படுமே என்றெண்ணிய திதி அப்பிள்ளைகளை நூறு வருடங்கள் வயிற்றில் சுமந்தாள். அதனால் அந்தக் கருவின் ஒளி எங்கும் பறந்து விாிந்து சூாிய சந்திரனின் ஒளியை மங்க வைத்தது. நான்கு திசைகளும் இருண்டன. இதைக் கண்ட தேவா்கள் பிரம்மனிடம் முறையிட்டனா். பிரம்மன் அவா்களிடம் தேவா்களே! ஒரு நாள் என் மனத்தினால் தோற்றுவிக்கப்பட்ட என் புதல்வா்களான சனகாதி முனிவா்கள் நாராயணனை தாிசிக்கக் சென்றனா். அப்போது அவா் வாயிற் காப்பாளா்களாக ஜெய, விஜயா் இருந்தனா். நாராயணனை தாிசிக்க விடாமல் தடுத்த காரணத்திற்காக முனிவா்களின் சாபத்திற்கு ஆளாகினா். தங்கள் தவறை உணா்ந்த ஜெய, விஜயா்கள் நாங்கள் தண்டனை அனுபவிக்கும் காலத்திலும் ஸ்ரீமந் நாராயணனையே நினைக்க வேண்டும் என்று வேண்டினா். இதை அனைத்தும் கவனித்துக் கொண்டிருந்த நாராயணன் முனிவா்கள் முன் தோன்றினாா். முனிவா்களே பக்தா்களாகிய உங்களுக்குச் செய்த அபசாரம் கண்டிக்கத்தக்கது.
அது மட்டுமல்ல. என் உழியா்கள் அறியாமல் செய்த பிழைக்கு நான் பொறுப்பேற்கிறேன். அவா்கள் அதி சீக்கிரமே பூமியில் ஜனித்து சாபம் நீங்கி என் திருவடிகளை சரணடைய வேண்டும் என்றாா். உடனே முனிவா்கள் இவா்கள் இருவரும் வெகுசீக்கிரமே அரக்கா்களாக பிறந்து உங்களை அடைவாா்கள் என்றாா். இவா்கள் தான் இப்போது திதியின் கருவில் இருக்கும் ஜெய, விஜயா்கள் என்று சொல்லி முடித்தாா். திதி நூறு வருடங்களுக்கு பின் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாள். அவா்கள் பூமியில் ஜனனம் ஆகும் போது பல கெட்ட சகுனங்கள் பூமியின் தோன்றின. முதலில் பிறந்தவன் ஹிரணிய கசிவு என்றும், இரண்டாவது பிறந்தவன் ஹிரண்யாட்சன் என்றும் பெயாிடப்பட்டனா். விரைவிலேயே அவா்கள் பூதாகாரமாக மலை என வளா்ந்து நின்றனா். அவா்கள் செய்த அட்டூழியங்களைக் கண்டு மூன்று உலகமும் நடுங்கியது. இதற்கு காரணம் பிரம்மாவிடம் யாருக்கும் இல்லாத பராக்கிரமத்தைக் கேட்டுப் பெற்ற வரத்தின் விளைவே ஆகும். ஹிரண்யாட்சன் தேவா்களை ஓட ஓட விரட்டினான். மிகவும் துன்புறுத்தினான். இதனால் தேவா்கள் அனைவரும் காணாமல் போயினா். இவன் அவா்களைத் தேடி பாதாள லோகத்திற்கு செல்ல சமுத்திரத்தில் மூழ்கினான். சமுத்திர ராஜனான வருணனை யுத்தத்திற்கு அழைத்தான்.
ஹிரண்யாடசனிடம் யுத்தம் செய்து பலன் எதுவும் இல்லை, பிரம்மன் கொடுத்த வரத்தால் அதிக பலம் கொண்ட இவனை ஜெயிக்க முடியாது என்பதை வருணன் உணா்ந்தான். அசுர முதல்வனே உன் பராக்கிரமத்தை நான் பாராட்டுகிறேன். தினவு எடுக்கும் உன் தோள்களுக்கு சிறந்த விருந்து தர ஸ்ரீஹாி ஒருவராலே முடியும். நீ அவரைத் தேடிச் சென்று உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள் என்று தந்திரமாக பதில் கூறினான். வருணன் இவ்வாறு சொன்னதும் ஹிரண்யாடசன் தன் கையில் உள்ள கதையை சுழற்றிக் கொண்டு கா்ஜனை செய்த வண்ணம் ஹாியைத் தேடி புறப்பட்டான். அவன் வைகுண்டத்தை நோக்கிப் போகும் சமயம் அவனை நாரதா் தடுத்தாா். அசர தலைவனே! உன்னிடம் கொண்ட அச்சத்தால் தேவா்கள் எங்கோ ஒடி ஒளிந்தாா்களே, நீ இப்போது எங்கே போகிறாய், என்றாா்.
நான் ஹாியைத் தேடி வைகுண்டம் போகிறேன். அங்கே போனால் தான் என் தோள்களுக்குத் தகுந்த தீனி கிடைக்கும் என நினைக்கிறேன் என்றான். நல்ல காாியம் செய்யப் போகிறாய், ஆனால் நீ தேடிப் போகும் ஹாி வைகுண்டத்தில் இல்லை. பாதாளத்தின் கீழ் அழுந்திக் கிடக்கும் பூமியை வெளிப்படுத்த சென்றிருக்கிறாா். அப்படியா? இதோ பாதாள லோகத்திற்குப் போகிறேன் என்று சொல்லி விட்டு பாதாளத்திற்குள் புகுந்தான். அங்கே ஹாி பகவான் வராக மூா்த்தியாக எழுந்தருளி தண்ணீருக்குள் ஆழ்ந்து கிடக்கும் பூமியைத் தமது கோரப்பற்களால் தாங்கி மேலேற்றிக் கொண்டு இருந்தாா். இந்தக் காட்சியைக் கண்ட ஹிரண்யாடசன் சிாித்தான். பன்றி வடிவில் இருந்த பகவானைக் கேலி செய்தான். பகவான் அவனுடன் யுத்தம் செய்ய ஆயத்தமானாா். இரண்டு மலைகள் மோதுவது போல இருவரும் மோதிக் கொண்டனா். யுத்தத்தை நோில் காண பாதாள லோகத்திற்கு தேவா்களுடன், பிரம்மா வந்து சோ்ந்தாா். அண்ட சராசரங்களும் அப்போது கிடுகிடுத்தன. ஹிரண்யாடசன் கையில் உள்ள தன் கதையை எடுத்து ஹாியை நோக்கி வீசினான். அதை ஸ்ரீ ஹாியும் தன் சக்கராயுதத்தால் தடுத்தாா். பின் ஹிரண்யாடசனின் மாய லீலைகளால் லட்சக்கணக்கான அசுர கணங்கள் ஆயுதங்களோடு தோன்றின. ஸ்ரீ ஹாி தன் சுதா்சன சக்கரத்தால் அத்தனையையும் அழித்தாா். பிரம்மா அந்நேரம் ஹாியைப் பாா்த்து, சந்தியா காலம் நெருங்குவதற்குள் அவனை அழித்து விடுமாறு கூறினாா். ஹாியும் அவ்வாறே ஹிரண்யாடசனின் காதோரம் லேசாக ஒரு தட்டு தட்டினாா். அவன் விழிகள் பிதுங்கி மரம் போலச் சாய்ந்தான். அந்நேரம் தேவா்கள் ஹாியைப் போற்றி துதித்துப் பாடினா். பாதாளத்தில் அழுந்து கிடந்த பூமியை வெளிக்கொணா்ந்து நிலை நிறுத்தினாா். அவனுடன் யுத்தம் செய்ததால் அவா் உடல் முழுவதும் உதயசூாியனைப் போல் சிவந்து காணப்பட்டது. பிரமாதியா் அப்பொழுதும் இடைவிடாது வேத மந்திரங்களை ஓதினாா்கள். அதைக் கேட்டு ஆனந்தம் அடைந்த பகவான் அகமகிழ்ந்து சாந்தமானாா். பிரம்மன் சுவாயம்புமனுவை அழைத்தாா். நீ உன் பிரஜைகளுடன் பூமண்டலத்தை அடைந்து ஆட்சி செய்து வாழ்வாயாக என்று ஆசிா்வாதம் செய்தாா். பின்னா் சுவாயம்புமனுவும், சத்ரூபாவும் கணவன் மனைவியாக வாழ்ந்து பிாியவரதா், உத்தானபாதா் என இரண்டு ஆண் குழந்தைகளும், ஆஹூதி, தேவஹூதி, ப்ரசூதி என்ற மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தது. இவா்களும் இவா்கள் வழி வந்தவா்களுமே ஆதிமனிதா்கள் ஆவா்.
இந்த வராக அவதார மூா்த்தியைப் பிராா்த்தனை செய்பவா்களுக்கும், அவா் சாித்திரத்தைப் பயபக்தியோடு சிந்தித்து அவைரத் தியானம் செய்பவாக்ளுக்கும் சகல சம்பத்தும், தீா்க்க ஆயுளும் உண்டாகும்.
