15. கணநாத நாயனார்

சீர்காழியில் மறைவர் குலத்தில் தோன்றியவர் கணநாதர். அடியார்களுக்கு தொண்டு செய்து உதவிகள் புரிந்து வந்தார். சைவ சமயம் தழைத்தோங்க பயிற்சிப்பள்ளி அமைத்தார். சைவத்திற்கு அடிப்படை தொண்டு. சமயம் வளர தொண்டர்கள் தேவை. தொண்டர்கள் இல்லா அமைப்பு வளராது. நீண்ட நாள்வாழாது என்ற நுட்பத்தைப் புரிந்து கொண்ட கணநாதர் நல்ல தொண்டர்களை உறுவாக்கினார்.

நந்தவனம் அமைப்பது, மலர்கொய்வது, மலர்மாலை கட்டுவது, பெருமான் திருமஞ்சனத்திற்கு உரியதைச் சேகரிப்பது. காலையும் மாலையும் கோவிலை அலகிடுதல், மெழுகிடுதல், தூயக் கைத்தொண்டு செய்தல், திருவிளக்கேற்றுதல், திருமுறைகளை எழுதுதல், ஓதுதல் என அவர்களின் விருப்பம் அறிந்து ஈடுபடுமாறு செய்து, அதன் பயன்களை புரியுமாறு எடுத்துக் கூறி அவர்களை அன்புடன் ஊக்குவிப்பார்.

கணநாத நாயனார் திருஞானசம்பந்த நாயனாரிடம் மிகுந்த ஈடுபாடும் பக்தியும் கொண்டிருந்தார். அவரையே தனது குருவாக எண்ணினார். இவர் திருஞானசம்பந்த நாயனாரை எப்பொழுதும் பேரன்போடு வழிபட்டு வந்தார்.

இவரை “கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் குறிப்பிடுகிறார்.

இல்லறத்தில் வாழ்ந்த இவர் அடியார்களை வழிபட்டார். ஆளுடைய பிள்ளையார் திருவடியில் மூண்ட அன்போடு நாளும் முப்பொழுதும் செய்தார். ஞானசம்பந்தப் பெருமாளை நாளும் வழிபட்ட நலத்தால் இறைவரது திருக்கயிலை மாமலையில் சேர்ந்து கணங்களுக்கு நாதராகி வழித்தொண்டில் நிலைபெற்றார்.

இறைவன்: பிரமபுரீஸ்வரர், தோணியப்பர், சட்டைநாதர்

கீழ் நிலை: ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் (பிரம்மனால் வழிபடப்பட்டவர்).
நடு நிலை: ஸ்ரீ தோணியப்பர் (பிரளய காலத்தில் தோணியில் காட்சியளித்தவர்).
மேல் நிலை: ஸ்ரீ சட்டைநாதர் (பைரவர் அம்சமாக, சட்டத்துடன் காட்சி தருபவர்).

மூலவர் மற்றும் அம்பாள்:
மூலவர்: ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர், ஸ்ரீ தோணியப்பர், ஸ்ரீ சட்டைநாதர்.
அம்பாள்: ஸ்ரீ பெரியநாயகி (ஸ்ரீ திருநிலை நாயகி).

சட்டநாதரின் சிறப்பு: சிவன் இங்கு சட்டநாதர் (பைரவ ரூபம்) என்ற வடிவில், மகாவிஷ்ணுவின் திரிவிக்கிரம அவதாரத்தின் அகந்தையை அடக்கியதாக நம்பப்படுகிறது.

இறைவி : பெரியநாயகி, திருநிலைநாயகி

தலமரம் : பாரிசாதம்

தீர்த்தம் : பிரமதீர்த்தம்

குலம் : அந்தணர்

அவதாரத் தலம் : சீர்காழி

முக்தி தலம் : சீர்காழி

செய்த தொண்டு : சிவ வழிபாடு

தலத்தின் சிறப்பு : 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். திருஞானசம்பந்தர் அவதாரத்தலம்.

திருஞானசம்பந்தர்: இவர் இளைய பிள்ளையார் (முருகனின் அம்சம்) என்றும் அழைக்கப்படுகிறார்.
திருஞானசம்பந்தர் குழந்தையாக இருந்தபோது, தந்தையுடன் கோயிலின் பிரம்ம தீர்த்தக்கரையில் இருந்தபோது,
சிவபெருமான், பார்வதியுடன் தோன்றி, அம்பாள் ஞானப்பால் ஊட்டி அருள்புரிந்தார். இந்த நிகழ்வின் பிறகே,
இவர் பாடிய 4169 பாடல்களின் முதல் பதிகம் சம்பந்தர் “தோடுடைய செவியன்” என்ற முதல் பதிகத்தைப் பாடினார்.

பிரளயத்தில் தோணி:
உலகப் பிரளயத்தின்போது, சிவபெருமான், பார்வதியுடன் தோணியில் (ஓடம்) ஏறி, 64 கலைகளுடன் இத்தலத்திற்குக் காட்சியளித்ததால், இங்கிருக்கும் மலைக்கோயில் இறைவன் ஸ்ரீ தோணியப்பர் என்று அழைக்கப்படுகிறார்.

பிரம்மாவின் வழிபாடு: பிரம்மதேவன் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டதால், மூலவர் ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

அப்பர் பெயர்: சம்பந்தர் திருநாவுக்கரசரை “அப்பா” என்று அன்புடன் அழைத்ததாலேயே, அவர் பின்னாளில் அப்பர் என்ற பெயர் பெற்றார்.

பிறந்த நாயன்மார்: 63 நாயன்மார்களில் கணநாத நாயனார் பிறந்த மற்றும் திருத்தொண்டு செய்த தலம் இது.

சித்தர்: 18 சித்தர்களில் ஒருவரான சட்டை முனி சித்தரின் ஜீவ சமாதி இங்கு உள்ளது.

காலம் / ஆட்சியாளர் : கி.பி.7-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்

குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : பங்குனி – திருவாதிரை

முகவரி : அருள்மிகு பிரமபுரீஸ்வரர் திருக்கோயில், சீர்காழி– 609110. நாகை மாவட்டம்.