51. புகழ்ச்சோழ நாயனார்

சோழநாட்டில் திருச்சி அருகிலுள்ள உறையூரை ஆண்ட மன்னன் புகழ்ச்சோழர். அவர் தமது தோள்வலிமையினால் உலக மன்னர்கள் தமது பணிகேட்டுத் தமது ஆணையின் கீழ் அடங்கி நடக்கச் செங்கோல் ஆட்சி புரிந்தனர். சிவாலயங்களில் எல்லாம் பூசனை விளங்கச் செய்வித்தும், அடியார்க்கு வேண்டுவன குறிப்பறிந்து கொடுத்தும், திருநீற்று நெறி விளங்கச் செய்தார். சிவபெருமானுடைய திருத்தலங்கள் பலவற்றைப் புதுபித்து நாளும்…

Read More

50. நேச நாயனார்

நல் ஒழுக்கம் உடைய பெரியோர்கள் நிலைபெற வாழும் காம்பீலி என்னும் பழம்பதி (தொன்மையான இடம்) ஒன்றுண்டு. அதில் அறுவையார் குலத்தில் செல்வம் மிக்க குடியில் வந்தவர் நேசர் என்பவர். அவர் இடையறாது சிவனடியார்களைப் போற்றி வந்தார். ஒரு போதும் சிவனடிச் சிந்தை மறவார். வாக்கினால் திருவைந்தெழுத்து ஓதுவதையும் மறவார். தமது மரபின் கைத்தொழிலைச் சிவனடியார்களுக்காகவே செய்துவந்தார்.…

Read More

49. நின்றசீர் நெடுமாற நாயனார்

அரிகேசரி என்னும் இவர் பெயர் இவர் மேற்கொண்ட போர்களின் வெற்றியினைப் பறை சாற்றும் விதமாக அளிக்கப்பெற்ற பட்டம் ஆகும். கூன் பாண்டியன் மதுரையை அரசு புரிந்து வந்தார். துணைவியார் மங்கையர்கரசி. அமைச்சர் குலச்சிறையார். நின்றசீர் நெடுமாறன் சமணத்தை தழுவியிருந்தார், துணைவியார் மங்கையர்கரசி. அமைச்சர் குலச்சிறையார் இருவரும் சைவத்தைப் போற்றினர். மன்னன் சமணத்தை சார்ந்திருந்ததால் சமணர்கள் கை…

Read More

48. நரசிங்க முனையரைய நாயனார்

நடுநாட்டை ஆண்ட மன்னர் நரசிங்க முனையரையர். அவர் திருவாரூரில் வாழும் ஆரூராரை அன்பினால் மகன்மையாகக் கொண்டார். ஆதிரை சிவனுக்குரிய நட்சத்திரம். அன்று வழிபடுதல் சிறந்த பலனாகும். மார்கழி திருவாதிரையில் கூத்தபிரான் சிறப்பு வழிபாட்டுடன் வீதியுலா வருவது சிறப்பானது. சிவன்கோயிலின் சிவச் செல்வங்களைப் பெருக்கிக் காத்தலைத் தம் உயிரினும் சிறப்பாகச் செய்தனர். சிவநெறித் திருத்தொண்டுகளைக் கனவிலும் மறவாமல்…

Read More

47. நமிநந்தியடிகள் நாயனார்

திருவாரூருக்கு தெற்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள ஏமாப்பேரூர் உள்ளது. அந்த ஊரின் அந்தணர் குலத்தில் பிறந்தவா் நமிநந்தியா். அந்த ஊர் மக்கள் சத்திய வாழ்வு வாழந்து வருபவர்கள். வேதநூல்களின் ஒழுக்கத்தைக் கடை பிடிப்பவர்கள். திருநீறே மெய்ப்பொருள் என்று எண்ணுபவா்கள். நமிநந்தி நாளும் அருகில் உள்ள ஆரூர் சென்று புற்றிடங் கொண்டாரை வழிபட்டு வந்தார். ஒருநாள்…

Read More

46. திருமூல நாயனார்

திருக்கையிலாயத்தில் சிவபெருமானது திருக்கோயிலுக்கு முதற்பெரும் காவல்பூண்ட திருநந்தி தேவரது திருவருள்பெற்ற மாணாக்கருள் அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் (அட்டமா சித்திகள்) கைவரப்பெற்ற சிவயோகியார் ஒருவர் இருந்தார். அவர் அகத்திய முனிவரிடத்திற் கொண்ட நட்பினால் அவரோடு சிலகாலம் தங்குவதற்கு எண்ணி அம்முனிவர் எழுந்தருளிய பொதியமலையை அடையும் பொருட்டுத் திருக்கயிலையினின்றும் புறப்பட்டுத் தென்திசை நோக்கிச் சென்றார். செல்லும் வழியில்…

Read More

45. திருநீலநக்க நாயனார்

திருநீலக்கர் காவிரி நாடாகிய சோழநாட்டில் நன்னிலத்திற்கு கிழக்கே 10கி,மீ தூரத்தில் சாத்தமங்கை என்னும் ஊரில் அந்தணர் குலத்திலே பிறந்தார். அந்த ஊரின் கோவிலுக்கு அயவந்தி என்று பெயர். இவர் வேதத்தின் உள்ளுறையாவது சிவபெருமானையும், சிவனடியார்களையும் அன்பினால் அருச்சித்து வணங்குதலே எனத் தெளிந்து கொண்டார். அதனால் நாள்தோறும் சிவாகம விதிப்படி சிவபூசை செய்து திருப்பணிகளையும் செய்து வந்தார்.…

Read More

44. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்

எருக்கத்தம்புலியூர்- ராஜேந்திரப்பட்டணத்தில் நீலகண்டயாழ்பாணர் பிறந்தார். இவர் திருவெருக்கத்தம்புலியூரில் யாழின் மூலமாக இன்னிசை வளர்க்கும் பெரும்பாணர் குலத்தில் பிறந்தவர். துனைவியார் மதங்க சூளாமணியார். இருவரும் ஒன்றாக உள்ளம் உருக கோவிலில் நாளும் வழிபடுவார்கள். பல தலங்களை வழிபட்டு மதுரை அடைந்தனர். நீலகண்டயாழ்ப்பாணர் தம்பிறப்பால் உள்ளே சென்று பாடமுடியாத நிலையில் கோவிலின் வாயிலிலே யாழிசைத்து மெய்யுருக பாடினார். அந்த…

Read More

43. திருநீலகண்ட நாயனார்

சிதம்பரத்தில் குயவர் குலத்தில் பிறந்த ஓர் அடியவர் நீலகண்டா். அவர் சிதம்பரத்துச் சிற்சபையில் சிவகாமியம்மையார் காண அற்புதத் தனிகூத்தாடும் நடராசவள்ளலை நாளும் வாழ்த்தி வழிபடும் நலத்திறன் மிக்கவர். அன்பர் பணி செய்வதும் அவ்வடியாரின் ஓர் அருஞ்செயல். தாம் ஆக்கும் ஓடுகளிற் சிறந்தனவற்றை அடியவர் அமுது செய்வதற்காக இலவசமாக அளிப்பது அவர்தம் வழக்கம். அவர் சிவபெருமானது எண்ணில்லாத…

Read More

42. திருநாளைப்போவார் நாயனார் (நந்தனார்)

தமிழ்நாட்டில் கொள்ளிட நதியால் வளம்பெற்ற ஆதனூரில் பிறந்தவா் நந்தனார். மாட மாளிகைகள் ஒருபுறமிருந்தாலும் மறுபுறம் சேரி. அச்சேரியிலுள்ள புலையர்களின் தலைவராக இருந்தார் நந்தனார். அவர் பிறப்பு அறிவறிந்த காலந்தொட்டு சிவபிரானிடத்து மிகுந்த அன்புடையவரானார். திருவடி நினைவன்றி மறந்தும் மற்றைய நினைவு கொள்ளாதவர். அவர் தமது குலப்பிறப்பிற்கேற்ற கொள்கையால் ‘புறத்தொண்டு’ புரிந்து வந்தவர். வைதீஸ்வர கோவிலிருந்து 3கி.மீ.…

Read More