61. மெய்ப்பொருள் நாயனார்

சேதிநாட்டுத் திருக்கோவலூரிலிருந்து அரசாண்ட குறுநிலமன்னர் குலத்தில் அவதரித்தார் மெய்ப்பொருள் நாயனாா். தொண்டை நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் நடுவில் உள்ள நடுநாட்டின் தலைநகர் திருக்கோயிலூர். சேதிநாடு என்ற பெயரும் உண்டு. அதை ஆண்ட மன்னர்கள் மலாடர்கள் எனப்பட்டனர். அக்குறுநில மன்னர்குலம் மாதொருபாகனார்க்கு வழிவழியாக அன்பு செய்து வந்த மலையமான் குலமாகும். நாயனார் அறநெறிதவறாது அரசு புரிந்துவந்தார். அவர்தம்…

Read More

60. மூர்த்தி நாயனார்

பாண்டிய நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிக குலத்திலே அவதரித்தார் மூர்த்தியார். இறைபற்று தவிர வேறு பற்று எதுவும் இல்லாதவர். லிங்கத்திருமேனிக்கு சந்தனக்காப்பு செய்து வழிபடுவது இவர் விருப்பமாகும். வடுக கருநாட்டு மன்னவன் மண் ஆசையால் மதுரைமீது படையெடுக்க மதுரை மன்னனால் ஆற்றல்மிக்க அந்த சேனையை எதிர்கொள்ளமுடியாமல் தோற்றான். கருநாட்டு மன்னன் சமண சமயம் சார்ந்தவன்.…

Read More

59. மூர்க்க நாயனார்

தொண்டைவள நாட்டின் பாலியாற்றின் வடக்கில் சென்னைக்கு அருகிலுள்ள திருவேற்காட்டில் பிறந்தார் மூர்க்கர். அதிற் சிவனடிமைத் திறத்தில் சிறந்து வழிவழி வந்த வேளாண் மரபில் அவதரித்த ஒரு பெரியவர் இருந்தார். அவர் திருநீற்றின் அடைவே பொருள் என்று அறிந்து அடியார்க்கு அமுது முன் ஊட்டி மகிழ்ந்து, பின் தாம் அமுது செய்யும் நியதியில் இடைவிடாமற் கடைப்பிடித்து வந்தார்.…

Read More

58. முனையடுவார் நாயனார்

நீடுரில் வேளாண் குலத்தில் பிறந்தவர் முனையடுவார். முனை என்றால் போர் முனையாகும். பல போர் முனைகளுக்குச் சென்று பகைவரை வென்றதால் முனையடுவர் எனப்பட்டார். சிவபெருமானிடத்தில் மாறாத அன்பு கொண்டு உள்ளம் உருக வழிபடுவார். அன்பு நெறியுடன் வீரம் செறிந்து நின்றவர். போர்முனையில் வென்று பெற்ற பெருநிதியங்களைச் சிவனடியார்க்கு மாறாதளிக்கும் வாய்மை உடையவர். பகைவர்களுடன் தோற்றவர் இவர்பால்…

Read More

57. முருக நாயனார்

சோழநாட்டிலே திருவாரூர் அருகே நன்னிலத்தை அடுத்த திருப்புகலூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் முருக நாயனார். ஞானவரம்பின் தலை நின்ற இப்பெருந்தகையார் இறைவன் திருவடிக்கீழ் ஊனமின்றி நிறைஅன்பால் உருகும் மனத்தார். மூன்று வேளையும் இறைவனுக்கு மலர் சூட்டி வழிபாடு செய்து வந்தார். ஞான நெறியில் நிற்பவர். சிவபெருமான் பால் உருகும் மனத்தால் வழிபடும் பண்பினர். நால்தோறும் நால்வகை…

Read More

56. மானக்கஞ்சாற நாயனார்

கஞ்சாறு என்னும் வளம் மிகுந்த ஊரிலே இவர் பிறந்தார். அவர் அவதரித்த குடி பரம்பரையாக அரசர்க்குச் சேனாதிபதிப் பதவி வகிக்கும் குடி. வேளாண்மையால் விளைந்த செல்வவளம் பெருகியவராயுமிருந்தார். அந்தக் குலத்தின் தலைவர், மன்னரின் படைத்தளபதி. சிறந்த சிவபக்தர். சிவமே மெய்ப்பொருள் என்று அறிந்தார். அதுவே எல்லாமென உணர்ந்தார். சிவனடியார்கள் என்ன நினைப்பார்களோ அவர்களின் குறிப்பறிந்து தொண்டு…

Read More

55. மங்கையர்க்கரசி நாயனார்

மங்கையற்கரசியார் பழையாறையை ஆட்சி செய்த சோழமன்னனுக்கு மகளாகப் பிறந்தார். இயற்பெயர் மானி என்பதாகும். அவர் சைவ ஒழுக்கத்தில் சிறந்தவராய் இருந்தாா். மணிமுடிச்சோழனின் மகளான மங்கையர்கரசி சிவபெருமானை தன் இளமைபருவத்திலிருந்தே வழிபட்டு ஆனந்தம் அடைந்திருந்தார். கூன் பாண்டிய மன்னனுக்கு மனைவியானார். பாண்டிய மன்னன் சமணசமயத்தைச் சார்ந்து ஒழுகினான். சமண அடிகள்மாரை அவன் பெரிதும் மதித்தான். குடிகளெல்லாரும் சமணராயினர்.…

Read More

54. பெருமிழலைக் குறும்ப நாயனார்

சோழநாட்டின் உள்நாடாகிய மிழலைநாட்டிற் பெருமிழலை என்னும் ஊரின் தலைவராய் விளங்கியவர் மிழலைக்குறும்பனார் ஆவர். இவர் சிவனடியார்கான திருப்பணிகளை விருப்புடன் செய்பவர்; சிவபெருமான் திருவடிகளை நெஞ்சத்தாமைரையில் இருத்தி வழிபாடு செய்பவர். இறைவனது திருவைந்தெழுத்தினை இடைவிடாது நினைந்து போற்றுபவர். இவ்வாறு சிவபத்தியிலும், சிவனடியார் பத்தியிலும் சிறந்து வாழும் மெய்யடியார்கள் சித்தம் நிலவும் திருத்தொண்டத்தொகை பாடிய நம்பியாரூரர் பெருமையைக் கேள்வியுற்றார்.…

Read More

53. பூசலார் நாயனார்

தொண்டை நாட்டில் திருநின்றவூரில் மறையவர் குலத்திலே தோன்றியவர் பூசலார் என்னும் பெருந்தகையார். இவர் சிவனடியாராகிய அன்பர்க்கு ஏற்றபணி செய்தலே பிறவிப்பயன் எனக் கொண்டு பொருள்தேடி அடியார்க்கு அளித்து வந்தார். அக வழிபாட்டிலே சிறந்து விளங்கிய சிவ பக்தர். சிவபெருமானுக்கு ஓர் கோவில் கட்ட நினைத்தார். பலரிடம் கேட்டும் நிதி கிடைக்கவில்லை. கோவில் கட்டுவது என்ற தன்…

Read More

52. புகழ்த்துணை நாயனார்

சோழ நாட்டிலுள்ள அழகாப்புத்தூரில் – செருவிலிபுத்தூரிலே சிவவேதியர் குலத்தில் புகழ்துணையர் பிறந்தார். சிவனது அகத்தடிமைத் தொண்டிற் சிறந்த அவர் சிவபெருமானைத் தத்துவ நெறியியில் சிவாகம விதிப்படி வழிபட்டு வந்தார். ஆகம விதிப்படி பெருமானைப் பூசித்துவந்தார். நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பசிநோயால் வருந்தினாலும் உள்ளம் தளராது இறைவனை நாளும் பூசித்து வந்தார். ஒருநாள் சிவலிங்கத் திருமேனிக்கு…

Read More