31. சத்தி நாயனார்

சோழ நாட்டில் வரிஞ்சை ஊரில் வாய்மை வேளாண் குலம் விளங்க அவதரித்தார் சத்தி நாயனார். அவர் சிவனிற்கு ஆட்சி செய்யும் திறத்தினர். யாவரேனும் தம் முன்பு சிவனடியார்களை இகழ்ந்துரைப்பாராயின் அவர்களது நாவினை அரியும் வலுவுடையராதலால் அவர் சத்தியார் எனப் பெயர் பெற்றார்.அடியார் நிந்தனை எனும்பாதகத்தைப் புரிவோரை இம்மையில் தண்டித்தால் அப்பாவம் மறுமையில் தொடராது. அப்படி தண்டிக்காதிருப்பின்…

Read More

30. சண்டேசுவர நாயனார்

வேதங்களைத் தானம், ஈதல், ஏற்றல், என்ற அறுவகைத் தொழிலில் முனைவோர், சத்திய வாழ்விலும், ஒழுக்க நெறியிலும் ஏழு உலகங்களும் போற்றும் மிகச் சிறந்த அந்தணர்கள் வாழும் ஊரான சேய்ஞலூரில் எச்சத்தச்சன்- பவித்திரை தம்பதிகளின் மகனாக விசாரசர்மா பிறந்தார். ஐந்து வயதினிலேயே வேதங்களின் உட்பொருளில் ஈடுபாடு கொண்டார். உள்ளத்தில் இருந்து சிவாகம உணர்வு வெளிப்பட்டது. ஏழு வயதில்…

Read More

29. சடைய நாயனார்

“என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை. சடைய நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே தோன்றியவர் சடையனார். திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின் மகள் இசைஞானியரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப்…

Read More

28. கோட்புலி நாயனார்

திருநாடியத்தான்குடி என்ற ஊரில் வேளாண் குடியில் கோட்புலியார் பிறந்தார். இந்நாயனார் நம்பியாரூரைத் தம் ஊருக்கு எழுந்தருளுமாறு வேண்ட, அவர் இசைந்துவர எதிர்கொண்டு அழைத்துத் தம் மாளிகையிற் சிறப்போடு பூசனையாற்றித் தம் மகளிர் இருவரையும் அடிமைகொள்ளுமாறு அர்ப்பணித்தார். அவர் தம் அர்ப்பணம் நம்பியாரூரரை அம்மகளிரின் ‘அப்பானா’க முறைமை கொண்டு சிங்கடியப்பன், வனப்பகைஅப்பன் எனத் தம்மைக் கூறிக்கொள்ளுமளவிற்கு நம்பியாரூரரை…

Read More

27. கோச்செங்கட்சோழ நாயனார்

சோழநாட்டிலே காவிரிச் சந்திர தீர்த்தத்தின் அருகிற் பெருமரங்கள் நிறைந்த நீண்ட குளிர்ந்த சோலையொன்றுள்ளது. அச்சோலையிலுள்ள ஒரு வெண்ணாவல் மரத்தடியில் வெளியுருப்பட்ட சிவலிங்கத் திருமேனியைக் கண்டு பெருந்தவத்தையுடைய வெள்ளை யானை தன் துதிக்கையினால் நன்னீரை முகந்து நாள்தோறும் திருமஞ்சனஞ் செய்து மலர்தூவி வழிபாடு செய்தது. அதனால் அவ்விடத்திற்குத் திரு ஆனைக்கா என்னும் பெயருண்டாயிற்று. அங்கே மெய்யுணர்விற் சிறந்த…

Read More

26. கூற்றுவ நாயனார்

களந்தை என்ற ஊரில் கூற்றுவனார் என்ற அடியவர் வாழ்ந்திருந்தார். பகைவர்களுக்கு எமன் போன்று இருப்பதால் கூற்றுவர் எனப் பெயர் பெற்றார். சிறந்த வாள் வலியும் தோள் வலியும் பெற்று மாவீரராக விளங்கியவர். சிற்றரசராக இருந்து பல மன்னர்களை வென்று தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார். தும்பைப் பூமாலையணிந்து வெற்றி பெற்றார் இப்பல்லவ மன்னர். சோழர்களின்…

Read More

25. குலச்சிறை நாயனார்

புகழ்பெரும் சிறப்புடைய பாண்டிநாட்டின் வளம்பல பெருக்கிய ஓர் ஊர் மணமேற்குடி. இவ்வூரினது தலைவராகத் திகழ்ந்தவர் குலச்சிறையார். திருத்தொண்டிற் சிறந்த இத்தொண்டர் சிவனடியார்களை முத்திகாரணர் எனத் துணிந்தவர். ஆதலால் சிவனடியார்களிடத்து மிகுந்த வாரப்பாடு உடையவராயிருந்தார். சிவனடியாரேயெனினும் அவர்தம் குலநலம் பாராது கும்பிடுவார். நல்லவர் தீயவரென நாடாது பணிந்து வணங்குவார். ஒருவராய் வரினும் பலராய் வரினும் எதிர்கொண்டு வரவேற்று…

Read More

24. குங்குலிக்கலய நாயனார்

திருக்கடவூரில் கலயர் பிறந்தார். கடவூர் திருக்கோவிலில் குடியிருக்கும் பெருமான் மீது அளவுகடந்த அன்பைக் கொண்டார் கலயர். காலையும் மாலையும் பெருமானுக்கு குங்குலியம் என்ற மணப்பொருளை நெருப்பில் இட்டு தூப பணியாற்றினார். கோவில் முழுக்க சிவமணமும் குங்குலிய மணமும் நிறைந்திருந்தது. செல்வமிக்க அந்தணர் குடியில் பிறந்தவர். சிவபெருமான் இவ்வடியவரின் திருத்தொண்டினை உலகறியச் செய்ய நினைத்தார், அதன் விளவாக…

Read More

23. காரைக்கால் அம்மையார்

புதுவை மாநிலத்தில் காரைக்காலில் வணிகர் குடியின் தலைவர் தனதத்தரின் மகளாக புனிதவதியார் பிறந்தார். குழந்தையாய் வீடு கட்டி விளையாடும்போது இறைவன் திருநாமத்தைச் சொல்வார். வளர்ந்து திருமணப்பருவம் அடைந்ததும் நாகப்பட்டினத்தில் வாழ்ந்த நீதிபதி என்பவரின் மகன் பரமதத்தனுக்கு திருமணம் செய்வித்தார். தனது மகளுக்குத் தன் வீட்டருகே வீடு ஒன்று தந்தார். இல்லறம் சிறப்பாக நடந்தது. புனிதவதியார் வீடுதேடிவரும்…

Read More

22. காரி நாயனார்

திருக்கடவூரில் காரி பிறந்தார். செந்தமிழை நன்கு ஆய்ந்து அறிந்தவர். கவி பாடுவதி வல்லுநர். மூவேந்தரிடமும் சென்று சொல் விளங்க பொருள் மறைந்து நிற்கும்படி பாடி உரியையும் விளக்குவார். மன்னர்கள் மகிழ்ந்து கொடுத்த பரிசினை கொண்டுவந்து சிவபெருமானுக்கு கோவில்களில் திருப்பணி செய்தார். அடியார்க்கு உதவிசெய்தார். வட கயிலையை மறவாது தியானம் புரிந்தார். அந்த தொடர் தியானத்தால் சிவபெருமான்…

Read More